130 likes | 363 Views
+2 இயற்பியல் செய்முறை. www.Padasalai.Net. செயல்பாட்டுப் பெருக்கி ( OPERATIONAL AMPLIFIER ). செயல்பாட்டுப் பெருக்கி. நோக்கம் IC - 741 என்ற செயல்பாட்டுப் பெருக்கியைப் பயன்படுத்தி 1) புரட்டும் பெருக்கி மற்றும் 2) கூட்டும் பெருக்கிகளை உருவாக்குதல். தேவையான கருவிகள்
E N D
+2 இயற்பியல் செய்முறை www.Padasalai.Net செயல்பாட்டுப் பெருக்கி ( OPERATIONAL AMPLIFIER )
செயல்பாட்டுப் பெருக்கி நோக்கம் IC-741 என்ற செயல்பாட்டுப் பெருக்கியைப் பயன்படுத்தி 1) புரட்டும் பெருக்கி மற்றும் 2) கூட்டும் பெருக்கிகளை உருவாக்குதல். தேவையான கருவிகள் IC - 741> இரட்டை மின்திறன் வழங்கி, உள்ளீடு மின்திறன் வழங்கி, 10 kΩ, 22 kΩ, 33 kΩபோன்ற மின்தடையாக்கிகள், டிஜிட்டல் வோல்ட்மீட்டர் முதலியன.
தேவையான விதி 1) புரட்டும் பெருக்கி மின்னழுத்தப் பெருக்கம் Av = - Vout / V in = - ( Rf / Rin )(அலகு இல்லை) இங்கு, Voutஎன்பது வெளியீடு மின்னழுத்தம் V inஎன்பது உள்ளீடு மின்னழுத்தம் Rf , Rinஎன்பன புறமின்தடையாக்கிகள். 2) கூட்டும் பெருக்கி வெளியீடு மின்னழுத்தம் Vout = - ( v 1 + v 2 ) வோல்ட் இங்கு, v 1 , v 2 என்பன உள்ளீடு மின்னழுத்தங்கள்
புரட்டும் பெருக்கி ( Inverting Amplifier )
புரட்டும் பெருக்கி ( Inverting Amplifier ) செய்முறை படத்தில் காட்டியவாறு மின் இணைப்புகளைத்தர வேண்டும். படி-1 Rin = 10 kΩமற்றும் Rf= 22 kΩஎன வைத்துக் கொள்ள வேண்டும். படி-2 உள்ளீடு மின்னழுத்தத்தை ( V in ) 1 வோல்ட் என வைத்துக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் வோல்ட்மீட்டர் மூலம் வெளியீடு மின்னழுத்தத்தை ( Vout ) அளவிட வேண்டும்.
புரட்டும் பெருக்கி ( Inverting Amplifier ) படி-3 உள்ளீடு மின்னழுத்தத்தை ( V in ) 1.5 வோல்ட், 2.0 வோல்ட், 2.5 வோல்ட் என்ற மதிப்புகளில் வைத்து, வெளியீடு மின்னழுத்தத்தைக் காண வேண்டும். படி-4 அளவுகளை அட்டவணையில் குறித்துக் கொள்ள வேண்டும். படி-5 சோதனையில் கிடைத்த மின்னழுத்தப் பெருக்க மதிப்பினை, கருத்தியல் மின்னழுத்தப் பெருக்க மதிப்போடு ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
புரட்டும் பெருக்கி ( Inverting Amplifier )
2) கூட்டும் பெருக்கி ( Summing Amplifier )
2) கூட்டும் பெருக்கி ( Summing Amplifier ) செய்முறை படத்தில் காட்டியவாறு மின் இணைப்புகளைத் தர வேண்டும். படி-1 R1= R2= Rf= 10 kΩஎன வைத்துக் கொள்ள வேண்டும். படி-2 உள்ளீடு மின்னழுத்தங்களை V1 = 1 வோல்ட; V2= 2 வோல்ட் என வைத்துக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் வோல்ட்மீட்டர் மூலம் வெளியீடு மின்னழுத்தத்தை ( Vout ) அளவிட வேண்டும்.
கூட்டும் பெருக்கி ( Summing Amplifier ) படி-3 வெவ்வேறு உள்ளீடு மின்னழுத்தங்களுக்கு அதாவது, V1 , V2 வின் வெவ்வேறு மதிப்புகளுக்கு,வெளியீடு மின்னழுத்தத்தைக் (Vout) காண வேண்டும். படி-4 அளவுகளை அட்டவணையில் குறித்துக் கொள்ள வேண்டும். படி-5 சோதனையில் கிடைத்த வெளியீடு மின்னழுத்த மதிப்பினை, கருத்தியல் வெளியீடு மின்னழுத்த மதிப்போடு ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
கூட்டும் பெருக்கி ( Summing Amplifier )
முடிவு செயல்பாட்டுப் பெருக்கியைப் (IC - 741) பயன்படுத்தி 1) புரட்டும் பெருக்கி மற்றும் கூட்டும் பெருக்கிகளின் மின்சுற்று படங்கள் வரையப்பட்டன. 2) சோதனை முறையில் கிடைக்கப் பெற்ற முடிவுகள், கருத்தியல் முறை முடிவுகளோடு ஒப்பிடப்பட்டன.
தயாரிப்பு பா.இளங்கோவன். எம்.எஸ்ஸி., எம்.எட்., எம்.ஃபில்., முதுகலை ஆசிரியர் ( இயற்பியல் ), (தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது – 2011 பெற்றவர் ) பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் – 631501. முதுகலை இயற்பியல் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் : 03-12-1984. நன்றி.வணக்கம்.