60 likes | 119 Views
நடிகர் சிவகார்த்திகேயனின் வாழ்த்துக்கள்.
E N D
சூப்பர் சிவகார்த்திகேயன் : வாழ்த்திய ரசிகர்கள்!
சினிமாவில்… • சினிமாவில், எல்லா முன்னணி ஹீரோக்களின் வெற்றிக்குப் பின்னாலும் அவர்களுடைய இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கிடைக்கின்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆதரவு அவர்களின் ஆயுள் முழுவதும் தேவைப்படுகிறது. • ஆனால் எத்தனை பேர், தங்களை கடவுளாக பூஜித்து கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து, சொந்தக் காசைப் போட்டு ஊரெங்கும் போஸ்டர்களை ஒட்டி திருவிழா போலக் கொண்டாடி மகிழும் ரசிகர்களை நினைத்துப் பார்க்கிறார்கள்?
நிஜத்தில்… • சிவகார்த்திகேயனின் வெற்றிக்குப் பின்னாலும், அவருடையை பல கட்ட முயற்சிகளும், பெரும் உழைப்பும் இருக்கிறது. அதே சமயம் இன்றளவும் அவரது தொடர் வெற்றிக்கு அவரது ரசிகர்களின் அன்பும், ஆதரவும் தான் முக்கிய காரணம் என்பதை அவரே மறுப்பதற்கில்லை.
ரெமோவின்வாழ்த்துக்கள்ரெமோவின்வாழ்த்துக்கள் • தற்போது சொந்தத் தயாரிப்பான ‘ரெமோ’ படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், ஆரம்பமாகியிருக்கும் பிளஸ் டூ பொதுத் தேர்வெழுதும் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மறக்காமல் ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். • அதோடு தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருங்கள், உடம்பை நன்றாகவும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றும் அக்கறையுடன் வாழ்த்தியிருக்கிறார்.
சிம்ப்ளி சூப்பர்… • அவரின் இந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட ரசிகர்களும் ”சிம்ப்ளி சூப்பர்..!” ”கிரேட் சிவகார்த்திகேயன் அண்ணா…” என்று உற்சாகமாக பதில் கொடுத்திருக்கிறார்கள். • வெல்டன் சிவகார்த்திகேயன் சார்!