330 likes | 546 Views
MDRT – ஒரு கண்ணோட்டம்... முகவர்கள் பார்வைக்கு & பயன்பாட்டிற்கு உங்களின் அனுபவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. Advance the slides leisurely for better audio visual treat. உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது.
E N D
MDRT – ஒரு கண்ணோட்டம்... முகவர்கள் பார்வைக்கு & பயன்பாட்டிற்கு உங்களின் அனுபவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது Advance the slides leisurely for better audio visual treat
உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது....... இதுவரை “முகவர் உலகம்” என்பது நாம் இருக்கும் பகுதியிலேயே முடிந்து விட்டது. நம் ஊரைத் தாண்டி, கோட்டத்தை தாண்டி, ஏன் நம் எல்.ஐ.சி யையும் தாண்டி காப்பீட்டுத் துறையில் உலகின் முன்னணி முகவர்கள் எப்படி செயல்படுகிறார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், அவர்களின் சமூக அந்தஸ்து எப்படி இருக்கிறது என்பதை அவர்களை நேரடியாக சந்தித்து கேட்டால், அவர்களோடு நட்பு பாராட்டினால் எப்படி இருக்கும்?
1927 ல் நிறுவப்பட்டது 78 நாடுகள் 430 நிதி / காப்பீட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக சுமார் 36000 நிதி ஆலோசகர்கள் வருடம் ஒருமுறை சந்தித்து விவாதம் அடுத்து: 2013 ஜூன் 9 முதல் 12 முடிய இடம்.: ஃபிலடெல்ஃபியா, பென்ஸில்வேனியா, USA அந்த சிகரத்தை அடைவதற்கான பாதை தெரிந்தால் பயணிக்க நீங்களும் தயார் தானே....!
முயன்றால் எட்டிவிடும் இலக்கு தான்... நினைவில் நிறுத்த வேண்டிய எண் 8 18 600 8 18 600
அன்றைய தினமே இன்னும் பத்து ஆண்டுகளில் நீங்கள் 500-1000 பாலிசிகள் செய்யமுடியும் என்று சொல்லியிருந்தால் மனம் ஏற்றுக் கொண்டிருக்குமா..? சிந்திப்போம்... முகவாண்மை எடுத்த முதல் நாளை நினைத்துப் பாருங்கள்... 8 18 600 இதன் பின் மிகப்பெரிய உழைப்பு உள்ளது என்பதே உண்மை... ஆனால் உறுதியான திட்டம் இருந்ததா என்பது கேள்விக்குறி... ஆனால் இன்று நீங்கள் எட்டியிருக்கும் உயரம் அதுதானே...!
ஒப்பிட்டுப் பார்ப்போம்: அன்றைய தினம் இருந்த நம் அனுபவம், இந்தத் துறையைப் பற்றிய நம் அறிவு, நம்முடைய வசதி வாய்ப்புகள்... ஆனால் இன்றோ இவையனைத்தும் பன்மடங்கு பெருகிவிட்டது... அத்துடன் கூடுதல் பொறுப்புணர்வும்.... 8 18 600
ஆம்... அன்று இருந்த நடை உடை பாவனைகள் அனைத்தையும் எல்.ஐ.சி மாற்றிவிட்டது என்பதை ஒப்புக்கொள்வீர்கள்... உங்களின் உழைப்பும் விடாமுயற்சியும் அதற்குரிய எல்.ஐ.சி யின் அங்கீகாரமும் வருமானமும் சமூகத்தில் உங்களை உயர்த்தியுள்ளன.. நீங்கள் இப்போது முக்கியமான முடிவெடுக்கும் தருணத்தில் .... இதே நிலையில் தொடரலாமா..... அல்லது நம் ஆளுமையை உலகிற்கு பறைசாற்றலாமா.... 8 18 600
நம்மால் முடியக்கூடிய ஒன்றை “முடியும்” என்று தானே முடிவு செய்ய வேண்டும்.... ஆசைப்பட்டதை கற்பனையில் அனுபவித்து பார்ப்பதே அடுத்தபடி.. அடையக் கூடிய இலக்கை அடைய ஆசைப்படுவதே முதல் படி.. அனுபவித்துப் பாருங்கள்.. உலகைத் தழுவிய உங்களின் ஆளுமையை...உங்களின் அங்கீகாரத்தை... 8 18 600
நாம் பழகக் கூடிய வட்டத்தை பொறுத்தே நம் வளர்ச்சியும் விளங்கும்... கேள்விப்பட்டிருப்பீர்கள்.... காக்கை கூட்டில் வளர்ந்த கழுகைப் பற்றி... மழைக் காலங்களில் மழையைத் தவிர்த்து மேகக் கூட்டங்களை தாண்டி உயர பறக்கும் கழுகு.. வளர்ந்து வந்த சூழலில் கூண்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் மற்ற பறவையினங்கள்.. 8 18 600
இந்த சமூகத்திலிருந்து.. இந்த நிறுவனத்திலிருந்து.. நாம் எவ்வளவு பயன் அடைந்திருக்கிறோம்... நாம் யாரைப் போல்.... இவர்களை கெளரவப் படுத்த நாம் திரும்ப என்ன செய்ய போகிறோம்.... 8 18 600
இந்த நிறுவனத்தின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற... எங்களின் பிரதிநிதியாக... உங்களால் முடியும்... இது வருமானத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலை.... 8 18 600 உங்களால் நிச்சயம் முடியும்...
ஆம்.. முதலில் ஆசைப்பட்டு அடுத்து கற்பனையில் அனுபவித்து.. கடமை உணர்ந்து... முடிவெடுத்து விட்டோம்.. ஏன் செய்ய வேண்டும்....? எவ்வளவு செய்ய வேண்டும்...? இவை இரண்டும் விடை தெரிந்த கேள்விகள்... விடை தெரிந்தாலும் அடிக்கடி அசை போட்டுக் கொண்டே இருக்க வேண்டிய பதில்கள்... அதுவே அடுத்தபடிக்கு அஸ்திவாரம்... 8 18 600
என்ன செய்ய வேண்டும் ..எப்போது செய்ய வேண்டும்…….. கமிஷன் ரூ. 8,18,600 அல்லது பிரிமியம் ரூ.32,74,400 8 18 600 காலம்: 1.1.2012 முதல் 31.12.2012 முடிய
கமிஷன் என்பது முதலாண்டு பிரிமியத்திற்கு உண்டான கமிஷன் • முதல் கமிஷன் மற்றும் முதலாண்டு தொடர் கமிஷன் இரண்டும் சேர்த்து • போனஸ் கமிஷன் சேராது. அது சான்றிதழ் வழங்குவதற்கு மட்டுமே பயன்படும் 8 18 600
நம்முடைய ஒரே வேலை... இந்த வருமானத்தை 31.12.2012 ற்குள் ஈட்டுவதும் அதற்கான திட்டத்தை தீட்டுவதும் தான்... கவனிக்க வேண்டிய விஷயம்.. அதிக பிரிமியம் பெற வாய்ப்புள்ள திட்டங்கள் அப்படி பெறப்படும் பிமியத்திற்கு அதிகபட்சம் கமிஷன் பெறுவதற்கான வழிவகைகள் 8 18 600
கீழே சில முக்கிய திட்டங்களின் கீழ் கிடைக்கும் கமிஷன் பட்டியல் … ஒரு ஒப்பீடு 8 18 600
8 18 600 வருமானமாகப் பெற செலுத்த வேண்டிய முதலாண்டு பிரிமியம் 32,74,400 (25%வருமானம் என்ற அனுமானத்தில்) சுமார் 33 லட்சம் எங்கிருந்து வரும்... ரெடி.. இனிமேல் தான் முக்கியமான பகுதிக்குள் நுழையப் போகிறோம்... எப்படிசெய்யப்போகிறோம்...` 32 74 400 8 18 600
IDEAS 8 18 600
தொழிலதிபர்கள் டாக்டர்கள் பொறியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் மொத்த (மண்டி) வியாபாரிகள் பீமா ஸ்கூல்: 100 குழந்தைகள் ஒரே பள்ளி எல்.ஐ.சி யின் ஊக்கத்தொகையுடன் பீமா கிராமம் ஒரே கிராமம் அங்குள்ள 100 நபர்கள் எல்.ஐ.சி யின் ஊக்கத்தொகையுடன் பாலிசிதாரர்கள் SB & Maturity Claims: சேவை நிமித்தமாக (NEFT) சந்தித்தல் நட்பு & உறவு : நம் தேவையின் ஒரு பகுதியை 10 நபர்களைத் தேர்ந்தெடுத்து ஒப்படைத்து விடலாம் அரசு ஊழியர்கள் ECS முறையில் சேமிப்பை ஊக்குவிக்கலாம் ரியல் எஸ்டேட் சமீபகாலமாக நல்ல வருமானம் ஈட்டிய தொழில் 8 18 600
எல்.ஐ.சி யின் உலகப் பிரதிகளே.. இந்த ஏழு வகையான வாய்ப்புகளின் நுழைவாயில் நீங்கள் அறியாததல்ல... இதற்கும் மேலே உங்களுக்கு தெரிந்திருக்கும்... செயல்படுத்த வேண்டியது தான்.... முதல் வேலை... MDRT 2012 (2013) MY PROSPECTS “ என் வளர்ச்சிக்கு காரணமானவர்கள்” பட்டியல் .... எழுதி வைத்திருப்பதை உறுதிப் படுத்துவோம்... 8 18 600
பார்ப்பதற்கே அழகாகத் தோற்றமளிக்கும் (nightingale) நோட்புக்கை “MDRT Special” என்று தலைப்பிட்டு அதை 7 பகுதிகளாக பிரிக்கவும். ஒவ்வொரு பகுதியையும் பொறுத்தமாக தலைப்பிட்டு மனக்கண் முன் வரும் வாய்ப்பு அதிகமுள்ள – ஸ்கூல். கிராமம், நட்பு மற்றும் உறவு (Centre of Influence) ...இவ்வாறாக தயார் செய்யவும். விற்பனை விற்பன்னராக... 80 % திட்டம் 20 % செயலாக்கம் 80% மூளை மற்றும் மனம் செய்ய வேண்டியது 20% உடல் உழைப்பு பயணத்தின் இலக்கு, சுலபமாக செல்லும் தடம், அதற்கான ஊர்தி, முன்பதிவு, எதிர்பார்த்த தடங்கல்கள் சமாளிக்க தயார் நிலை.... இவை அனைத்துமே நம் சிந்தனை வயப்பட்டது. இது ரெடியானால் நீங்கள் 80% ரெடி... 80 100 8 18 600
முதல் சில பக்கங்களில்.... இதுவரை ஈட்டியிருக்கும் கமிஷன்... டிசம்பருக்குள் கட்ட இருக்கும் முதலாண்டு தொடர்பிரிமியமும் அதற்குண்டான கமிஷன்.... SB & Maturity இவற்றிலிருந்து எதிர்பார்க்கும் பிரிமியம் மற்றும் கமிஷன்... 8 18 600
மேலும் சில TIPS… பீமா ஸ்கூல், பீமா கிராமம் போன்ற மெகா திட்டங்கள் செயல்படுத்தும் முன் அருகில் உள்ள கடிதத்தைப் போன்ற ஒன்றை கிளை மேலாளரிடமிருந்து பெற்றுச்செல்லவும். இது மதிப்பைக் கூட்டும்... இதைப் போன்ற திட்டங்களின் சிறப்பையும் “பள்ளி மற்றும் மாணவர்கள்” & “கிராமம் மற்றும் கிராமவாசிகள்” பெறும் பயன்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய வண்ணமயமான Pamphlet தயார் செய்யவும்.. 8 18 600
மேலும் சில TIPS… உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டத்தின் “Centre of Influence” நபர்களை கிளை மேலாளர், வளர்ச்சி அலுவலர் ஆகியோருடன் சந்தித்து கெளரவப்படுத்துவது ஈடுபாட்டை அதிகரிக்கும்..... 8 18 600
மேலும் சில TIPS… 50 – 100 பாலிசிதார்ர்களை வரவேற்று ஒரு சிறப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம்.. கூட்டத்தில் எல்.ஐ.சி யின் அருமை பெருமைகள், பாலிசிதாரர் பெறும் லாபம், புதிய மாற்றங்கள் (NEFT) இவற்றோடு புதிய பாலிசி எடுத்துக் கொள்வதன் அவசியம்.... இந்தக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் BM / DO உங்களின் உழைப்பு, நேர்மை மற்றும் MDRT குறிக்கோள் இவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். meeting 8 18 600
தொழிலதிபர்களை முதல் முறை சந்திக்கும் போது வியாபார நோக்கம் இல்லாத நட்புச் சந்திப்புக்களை கடைபிடியுங்கள்... உங்களின் குறிக்கோள், அதை நோக்கிய பயணம், அதற்கான தேவை மற்றும் ஏற்பாடுகள்... இவற்றைப் பற்றி சில சந்திப்புகள்... அதன்பின், அவருக்குப் பொறுத்தமான ஒரு “Plan Presentation” அவரின் கவனித்திற்கு... கனியக் காத்திருக்கும் நேரம் உங்களுக்குத் தான் நன்றாகத் தெரியுமே... 8 18 600
High Networth Customers பெயர்களை VIP என்று சில பக்கங்களை ஒதுக்கி பட்டியல் தயார் செய்யவும். அவர்களிடம் வணிகம் பெற சிறந்த முறையில் தயார் செய்த Presentation அவசியம். 8 18 600
நண்பர்களே…. உங்களில் சிலர் ‘இது என்ன தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று உள்ளது’ என்று நினைக்கலாம். “தேவை ரூ32 74 400 பிரிமியம் தானே அதற்கு, சரியான 6 வாய்ப்பாளர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி காப்புத் தொகை என்று வணிகம் முடித்தால் வேலை இன்னும் சுலபமாக முடியுமே…” என்றும் நினைக்கலாம். ஆம்.. மிகச்சரியானசிந்தனை... அப்படியும்செய்யலாம்.. MDRT என்றபுதிருக்குவிடைகாணபலவழிகள்உள்ளன.. உங்களின்சிந்தனையில்உதித்தவழியைப்பின்பற்றிவெற்றிபெறுங்கள்.. இலக்கைஎய்துவதுமட்டுமேநோக்கம்.. 32 74 400
அதே அடிப்படையில் இன்னொன்றையும் அறிவேன்.... நண்பர்களே... நீங்கள் அறியாத விஷயங்கள் இதில் அதிகம் இருந்திருக்காது... ஏனென்றால் இது உருவானதே உங்களின் அனுபவத்தை கேட்டு, அறிந்து, புரிந்து கொண்டதன் அடிப்படையில் தான்... எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார்... அவர் ஒருவர் மனது வைத்தால் நீங்கள் நிச்சயமாக MDRT க்கு தகுதி பெறுவது சுலபம்... 8 18 600
கவனத்தில் கொள்ளவும்... உடல் நலமும் மன நலமும் பேணிக் காக்கவும். நேரத்தில் உணவு, தேவைக்கேற்ற ஓய்வு அவசியம்... நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியோடு இருத்தல் அவசியம்... எனக்குத் தெரிந்த அந்த நபர் இன்னும் சொல்லவில்லயே என்ற ஏக்கமா....? தளர்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள நல்ல நட்பு வட்டம்.. “நீ கண்டிப்பாக சாதித்துக் காட்டுவாய்” என்று மனமாறப் பாராட்டும் நல்லஉள்ளங்கள்... போதும்..இவை அமைந்தால் போதும்... வெற்றி நிச்சயம்.... 8 18 600 பாஸ்போர்ட் ரெடி தானே....
நூற்றுக் கணக்கான பாலிசிகளை எல்.ஐ.சி யின் சொத்தாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் மனம் வைத்துவிட்டால் நீங்கள் MDRT தான் கவலைப் படாதீர்கள்.... அவர் உங்களுக்கும் தெரிந்தவர் தான்..... ஆம்.. நீங்கள் தான்...! 8 18 600 அதன் மூலம் ஒவ்வொரு பாலிசிதாரர் குடும்பத்திற்கும் மிகப்பெரிய சேவை செய்திருப்பவர்... அவர் பின் மிகப்பெரிய உழைப்பும் ஆழ்ந்த அனுபவமும் உள்ளது...
உங்கள் சிந்தனைக்கு… சில பொன்மொழிகள்... சோர்வு ஏற்பட்டால் சுறுசுறுப்பாவதற்கு... படியேற பயந்தேன்.ஏறிய பின் வியந்தேன். வெற்றியின் தூரம்வெகு தூரம் இல்லை என்று பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் ! கதவு திறந்தால் கனவு பலிக்கும்! செய்யும் ஒவ்வொரு செயலிலும் முடிந்தவரை உங்களை வித்தியாசமாக வெளிப்படுத்துங்கள். வெற்றி நிச்சயம். நேற்று நீங்கள் செய்யாத ஒன்றைஇன்று செய்ய வேண்டும். அதுதான்வெற்றிக்கு வழி”. “என்ன செய்ய வந்தோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்” என்ற கேள்வியை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருப்பது நல்லது. சாதனைச் செயல்கள் COMFORT ZONE ற்கு வெளியில் உள்ளது. ஆனால் கண்டிப்பாக EFFORT ZONE ற்குள் தான் உள்ளது. முயன்றவர்கள் வெற்றி பெறுவர்; முயலாதவர்கள் ஏற்கனவே தோற்றுவிட்டார்கள். எல்லா கேள்விகளுக்கும் நாம் விடை கண்டுவிட முடியாது; அதற்குள் காலம் கடந்துவிடும். நான் வெற்றி பெறுவேன்; உடனடியாக இல்லாவிட்டாலும், நிச்சயமாக.. இன்று முயற்சித்த வாய்ப்பு கை நழுவிப்போனால், என்றோ முயற்சித்த வாய்ப்பு இன்று கைகூடும். கற்பனைக்கு எட்டாத எந்த விஷயத்தையும் அடைய முடியாது.
எதிர்வரும் புத்தாண்டு 01.01.2013 அன்று........... உங்களின் ஒருமித்த முனைப்புடன் கூடிய திட்டமிட்ட உழைப்பின் ரிசல்ட் “YOU HAVE QUALIFIED FOR MDRT CONFERENCE 2013” அன்பிற்குரிய காப்பீட்டு ஆலோசகர்களே... எண்ணற்ற நல்ல உள்ளங்களின் நன்மதிப்பும் அவர்கள் வாழ்த்தும், உங்கள் MDRT பாதையில் பயணத்தைச் சுலபமாக்கும். “முடியும்” என்ற முடிவெடுத்தமைக்கு நன்றி… நீங்கள் வெற்றி பெறவேண்டும் என்ற பிரார்த்தனையுடன்..... டி.எஸ்.ராஜன் 94431 56829 tsr.iyengar@gmail.com